---Advertisement---

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Published on: November 1, 2020
---Advertisement---

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு. இவர் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவுக்காக சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் அவரது உடல்நிலை மிக மோசமடைந்து கொண்டே வந்தது. நாளடைவில் நுரையீரல் 90 சதவீதம் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும் அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.15மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு முன் சென்னையிலேயே முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.

இவர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நின்று வெற்றிபெற்றவராவார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!