---Advertisement---

ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கி… மருத்துவர் செய்த கொடூரம்… கடைசியில் பறிபோன உயிர்…!

By Sri
Published on: September 12, 2024
---Advertisement---

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சீனா மாகாணம் ஜெய்ஜியான் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் யோங்காங் டேவே
என்ற பல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இங்கு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்றுப் பல் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டன.

அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன் முறைப்படி இம்பிளாட் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28ஆம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் மகள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

உயிரிழந்தவரின் வயது தொடர்பான எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்படுவது குறித்து சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் .இது அறுவை சிகிச்சை என்பதைவிட ஏதோ வினோதமான மருத்துவ எக்ஸ்பிரிமெண்ட் போல் இருப்பதாக பலர் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒரு நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதை அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!

Conceptual graphic representing the theatrical rights acquisition of the film Drones by 5 Star Senthil.

டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

Official announcement poster for Kamal Haasan's upcoming action film directed by SU Arun Kumar.

கமல்ஹாசன் – எஸ்.யூ. அருண்குமார் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாஸ் ஆக்‌ஷன் படம் – மிரட்டலான தோற்றம்!