திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சின்னம்பட்டியை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன், இவரது மனைவி வித்யா இவர்களுக்கு ஹரிஹரதீபன் என்ற 6 வயது மகனும் இரண்டு பெண்குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஹரிகரதீபன் தன் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் பிரியதர்ஷினி வீட்டுக்கு விளையாட சென்றுள்ளார்.
அப்போது மேலே கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.
வெகு நேரமாகியும் ஹரிகரதீபனை காணாது அவரை பார்க்க சென்ற தாய் வித்யா கதறி அழுதார். அவரது கதறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசாரும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்குவந்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை…..விளையாட சென்றபோது நடந்த கொடூரம்#YoungBoy #Murder #Dindigul pic.twitter.com/kOOPoBNszQ
— Thanthi TV (@ThanthiTV) November 8, 2021













