---Advertisement---

திண்டுக்கல் லியோனியின் பேச்சால் பரபரப்பு

Published on: March 25, 2021
---Advertisement---

திமுக இலக்கிய அணியில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளார்.தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் சென்று இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கோவை குனியமுத்தூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி ஃபாரின் மாட்டு பால் குடித்ததால் எட்டுபோல் இருந்த பெண்களின் இடுப்பு ஃபேரல் போல் ஆகி விட்டது என பேசினார். அதை குடித்து பலூன் மாதிரி ஆகி விட்டது இடுப்பு என்றும் பேசினார். பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி ஓடுவதாகவும் பேசினார்.

எதுவும் தப்பாக பேசிவிடுவாரோ என முன்பே உணர்ந்த திமுக தொண்டர் ஒருவர் ரேசன் அரிசி குறைபாடுகளை திடீரென சுட்டிக்காட்டி பேச்சை மடை மாற்ற முயன்றும் திண்டுக்கல் லியோனி யோசிக்காமல் பெண்களின் இடுப்பை பற்றி பேசியதால் அது சர்ச்சையாகி கிடக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.