நேற்று இரவு தனுஷ் வெளியிட்ட அறிக்கைதான் ஹாட் டாபிக் ஆக இன்று முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த தனுஷ் தனது திறமையால் வேகமாக முன்னேறினார்.
2004ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.
அவ்வப்போது இவர்களுக்குள் பிரச்சினை இருப்பதாகவே செய்திகள் வந்து கொண்டே இருந்தன. இருப்பினும் பிரச்சினைகள் வெளியே தெரியாதபடி இருந்து வந்தன.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 18வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தோம் தற்போது இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







