கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மக்கள் போக போக இதன் விபரீதத்தை உணர தொடங்கினார்.
இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக 2020ல் பரவிய கொரோனாவால் உலகளாவிய லாக் டவுன் ஏற்பட்டது இந்த வருடம் இந்தியாவில் கடுமையான முறையில் கொரோனா தொற்று பரவியது. தற்போது உருமாறிய கொரோனா இலங்கையில் பரவி சற்று ஓய்ந்திருக்கிறது.
இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மட்டும் 3வது அலையை உருவாக்கிட முடியாது இந்த பெருந்தொற்று கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இந்த வைரஸ் இருந்தாலும் இதை சாதாரணமாக கையாண்டு விட முடியும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் கூறியுள்ளார்.













