---Advertisement---

கணவரின் அன்பை அறியாமல் கஞ்சா வியாபாரியுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்த மனைவி

Published on: December 21, 2020
---Advertisement---

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோட்டைக்குமார். இவர் கோவைக்கு சென்று தான் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் எனக்கூறி பிரபு என்பவர் வீட்டில் குடி இருந்துள்ளார். அப்போது பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும் கோட்டைக்குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிரபு சற்று வசதியானவர் என்பதால் பிரபுவின் மனைவி பத்மஸ்ரீயை கடத்துவது போல் கடத்தி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார் கோட்டைக்குமார். இதற்கு பிரபுவின் மனைவி உடந்தையாக இருந்துள்ளார்.

மனைவி மற்றும் குடும்பத்தின் மீது அதிக பற்றுக்கொண்ட பிரபு, வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என போலிசுக்கு சொல்லாமல் தனியாக பணம் கொடுத்து ஏற்கனவே இரண்டு முறை மனைவியை மீட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் புதிதாக கடந்த 15ம் தேதி இதே போல் வீடு புகுந்து பத்மஸ்ரீயை கடத்தியுள்ளான். 1 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் எங்காவது உன் மனைவியை விற்று விடுவேன் என மிரட்டியுள்ளார் பொறுத்து பார்த்த பிரபு சூலூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தப்பிஓடிய பிரபு- பத்மஸ்ரீயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.