---Advertisement---

முன்னாள் இணை இயக்குநர் எல். மணிமாறன் மறைவு… மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

By Sri
Published on: August 30, 2024
---Advertisement---

செய்தி மக்கள் தொடர்பு துறை முன்னாள் இணைஇயக்குனர் எல் மணிமாறன் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கின்றார்.

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறையில் முன்னாள் இணை இயக்குனராக பணியாற்றியவர் எல் மணிமாறன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது “செய்தி மக்கள் தொடர்பு துறையின் முன்னாள் இணை இயக்குனரும் எனது உறவினருமான எல் மணிமாறனின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மணிமாறனின்  மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாளர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறியிருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!