---Advertisement---

செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு கந்தரப்பம் செய்யும் முறை

Published on: February 25, 2022
---Advertisement---

செட்டிநாடு எனப்படும் காரைக்குடி தேவகோட்டை பகுதிகளில் கந்தரப்பம் எனும் பலகாரம் இல்லாது பல விசேஷங்கள் நிறைவு பெறாது.

கந்தரப்பம் என்றால் என்ன அந்த கந்தரப்பம் எப்படி செய்வது என பார்ப்போம்.

கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள் : பச்சை அரிசி – ஒரு டம்ளர், உளுத்தம் பருப்பு – கால் டம்ளர், வெல்லம் – முக்கால் டம்ளர், ஏலக்காய் – 3, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு –கால் ஸ்பூன்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரிசியும், உளுத்தம் பருப்பும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது நன்றாக ஊற வேண்டும்.

நன்றாக ஊறிய அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்ததை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் பொடி செய்த முக்கால் டம்ளர் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். வெள்ளம் சேர்த்தவுடன் அரிசி மாவு சற்று இளகி கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்திற்கு வந்துவிடும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் ஒரு குழம்பு கரண்டியைப் பயன்படுத்தி மாவினை அள்ளி  ஊற்ற வேண்டும் சிறிது நேரத்தில் அப்பம் உப்பி வரும். அப்பொழுது அப்பத்தினை திருப்பிவிட வேண்டும். இரண்டு புறங்களிலும் நன்றாக சிவந்து வந்தவுடன் அப்பதினை வெளியில் எடுக்க வேண்டும். ஒரு அப்பம் பொறிந்த பின்னரே அடுத்த அப்பம் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது பரிமாறலாம்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!