தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
அதன்படி இன்று மற்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதையடுத்து 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







