---Advertisement---

தமிழகத்தில் இரவு 7 மணி வரை… 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!

By Sri
Published on: August 14, 2024
Rain
---Advertisement---

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் காற்று திசை மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இரவு 7 மணி வரை தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.