பிரபல தொலைக்காட்சியான தந்தி டிவியில் மூத்த பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த டிவியில் இவர் நடத்திய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி பிரபலம்.
அதன் பிறகு அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே தனியாக சாணக்யா என்ற யூ டியூப் சேனலை தொடங்கினார்.
சாணக்யா சேனல் இரண்டு முறை ஹேக்கர்களால் இந்த மாதத்தில் முடக்கப்பட்டது.இரண்டு முறையும் அதை போராடி மீட்டார் பாண்டே.
தற்போது நேற்று முன் தினம் அவரது டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டு தற்போது மீட்கப்பட்டுள்ளது.
25.12.2021 #Christmas இரவு @ChanakyaaTv @Twitter கணக்கு #hacking செய்யப்பட்டது. முயற்சிக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொடுத்துள்ள போலீஸ் புகாரோடு இதையும் இணைக்க இருக்கிறோம். இடையில் வந்திருக்க வாய்ப்புள்ள தொடர்பற்ற tweet கள் @ChanakyaaTvக்கு சம்பந்தம் இல்லாதவை. 🙂🙏
— R Rangaraj Pandey (@RangarajPandeyR) December 25, 2021













