---Advertisement---

கேமராவுக்கு பெயிண்ட் அடித்து ஏடிஎம்மில் கொள்ளை

Published on: December 9, 2021
---Advertisement---

ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து வித்தியாசமான ஏடிஎம் திருட்டு ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா நகரில் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் ரூ.41 லட்சம் திருடு போய் உள்ளது. இதில் சிந்தகொம்ம திண்ணா கேஎஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி அருகே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இரவு திருடர்கள் புகுந்து அங்குள்ள சில கண்காணிப்பு கேமராக்களுக்கு கருப்பு பெயிண்ட் பூசி, ஏடிஎம்மில் இருந்த ரூ.17 லட்சத்தை திருடி சென்றனர். பின்னர், அடுத்ததாக ரிம்ஸ் மருத்துவமனை கூட்டு ரோட்டில் உள்ள மற்றொரு எஸ்பிஐ ஏடிம்மிலும் ரூ.24 லட்சத்தை திருடி சென்றனர்.

இது குறித்து செவ்வாய்க் கிழமை காலை, போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கடப்பா போலீஸார் சம்பவ இடங்களுக்கு சென்று மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முதல் திருட்டு நடந்த கேஏஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் ஒரு கார் முற்றிலுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது. ஒருவேளை இந்த காருக்கும், திருட்டு சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்ப்பு இருக்குமோ ? எனும் கோணத்திலும் போலீஸார் வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!