---Advertisement---

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா…? போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்…!

By Sri
Published on: August 13, 2024
---Advertisement---

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை தமிழக போக்குவரத்து துறை மறுத்து இருக்கின்றது.

தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அந்த முடிவை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் தொடர்பாக வெளியாகும் செய்திக்கு அரசு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்து இருக்கின்றது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் எந்த கருத்தும் கிடையாது. பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்த எண்ணம் தமிழக அரசுக்கு தற்போது இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று போக்குவரத்து துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.