சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பிரியாணிக்கடையில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் பலருக்கு அந்த பிரியாணியால் பிரச்சினை ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பிரியாணிக்கடை சோதனை இடப்பட்டு சமையலரும், கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். அக்கடை சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது போல கெட்டுப்போன இறைச்சி, பிரியாணியை விற்பனை செய்து வரும் பல கடைகளை சுகாதாரத்துறையினர், உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக பல ஹோட்டல்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரியாணிக்கடைகள், அசைவ உணவுக்கடைகள் பலவற்றில் கெட்டுப்போன இறைச்சிகள், வண்ணம் பூசிய இறைச்சிகள் கிலோக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.













