பயில்வான் ரங்கநாதனை பலருக்கும் ஒரு நடிகராக மட்டுமே தெரியும். எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துக்குவான் காமெடியை இவர் நடிப்பில் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
40வருடங்களுக்கும் மேலாக பத்திரிக்கையாளராக பணியாற்றும் பயில்வான் ரங்கநாதன் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை கொடுத்து வந்தார். அந்த தொடர்பில் மிக அதிகமான தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டியுள்ளார் இவர்.
ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என அனைவருடனும் இவர் நடித்துள்ளார்.
இவர் பத்திரிக்கையாளராக இருந்த சமயத்தில் அரசல் புரசலாக நாம் கேள்விப்பட்ட கிசுகிசுக்களை ஓப்பனாக பொதுவெளியில் சமீபகாலமாக சொல்லி வருகிறார் இவர் .
புயல் நடிகை மான் நடிகை என நாம் சூசகமாக சொல்லும் எழுதும் விசயத்தை இவர் ஓப்பனாகவே இந்த நடிகருக்கும் நடிகைக்கும் அந்த காலத்தில் தொடர்பு இருந்தது என பெயரை குறிப்பிட்டே சொல்லி வருகிறார்.
இன்னும் பல விபரீதங்களையும் ஓப்பனாகவே இவர் சொல்லி வருகிறார்.
இதனால் பல பிரபலங்கள் இவரை சமீபகாலமாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.









