---Advertisement---

நெய்யில் கலப்படம்… 3 நிறுவனங்களுக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!

By Sri
Published on: September 25, 2024
---Advertisement---

நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறி 3 நிறுவனங்களுக்கு கேரளா அரசாங்கம் தடை விதித்து இருக்கின்றது.

இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு தினம் தோரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் கடந்த சில வருடங்களாக மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தரமற்ற நெய்யை வாங்கி அதில் லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய நெய் கொண்டு லட்டு  தயாரிக்கப்பட்டு வருவதாக சந்திரபாபு தலைமையிலான அரசு தெரிவித்து இருக்கின்றது. இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் அனைத்து இடங்களிலும் கோவில்களில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை பரிசோதித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய்யில் தரம் இல்லை என்று புகார் வந்த நிலையில் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்ஆர்எஸ் ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றை சேர்த்திருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த மூன்று வகை நெய் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் இந்த 3 நிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!

Editorial visual featuring the song release from Jolliya Iruntha Oruthan.

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!