---Advertisement---

Legend Arul Saravanan Next: லீடர் ரிலீஸாகும் முன்னே அடுத்த படத்திற்கு அட்வான்ஸ்! துரை செந்தில்குமாருக்கு அடித்த ஜாக்பாட்!

By Sri
Published on: April 25, 2026
Actor Arul Saravanan and Director Durai Senthilkumar at a film event discussing their collaboration.
---Advertisement---

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான பாணியால் கவனம் ஈர்த்தவர் ‘லெஜண்ட்’ அருள் சரவணன். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ (Leader) திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 3-ஆம் தேதி ‘லீடர்’ (Leader) வெளியாகி, திரையரங்களில் பாக்ஸ் ஆபீஸ்-லில் சாதனை படைத்துள்ளது. இதில் சவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ‘லீடர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த  நிலையில், திரையரங்குகளில் படம் வெளியாவதற்கு முன்பே,  ‘லெஜண்ட்’ அருள் சரவணன் இயக்குநரிடம் “நாம் மறுபடியும் இணையலாம்” என்று கூறி  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளர்.

‘லீடர்’ படத்தின் அவுட்புட் மற்றும் மேக்கிங்கில் லெஜண்ட் சரவணன் மிகுந்த திருப்தியில் உள்ளாராம். இதன் காரணமாக, அடுத்த படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சரவணன், இதற்காக ஒரு கோடி ரூபாயை அட்வான்ஸாக கொடுத்து இயக்குநரை அப்போதே லாக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு படம் ரிலீஸாகும் முன்பே அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் கொடுக்கப்படுவது, இயக்குநரின் மீதான அசாத்திய நம்பிக்கையைக் காட்டுகிறது.

Latest high-definition movie stills of Legend Saravanan from his upcoming film Leader directed by Durai Senthilkumar.
‘லீடர்’ படத்தின் பிரத்யேக ஸ்டில்கள்: லெஜண்ட் சரவணனின் மாஸ் லுக் வைரல்!

இந்தக் கூட்டணியின் முதல் படமான ‘லீடர்’ படத்திற்காக துரை செந்தில்குமாருக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது இரண்டாவது படத்திற்காக அவரது சம்பளம் அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு, சுமார் 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘கொடி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த துரை செந்தில்குமாருக்கு, லெஜண்ட் சரவணனுடனான இந்தப் பயணம் ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

‘லீடர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த படத்தின் கதை விவாதங்களும் ரகசியமாகத் தொடங்கப்பட்டதாம். லெஜண்ட் சரவணன் தனது முந்தைய படமான ‘தி லெஜண்ட்’ படத்தில் காட்டிய பிரம்மாண்டத்தை விட, இந்தப் படங்களில் கதைக் களத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் புதிய திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!

Official promotional poster for the Marathi film gondhal, India's official entry to the 2027 Oscars.

2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

Official announcement poster for Bhavana Studios' upcoming multilingual comedy-drama Picnic.

பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!