---Advertisement---

ஏப்ரல் 1 முதல் கார்களில் ஏர்பேக் கட்டாயம்

Published on: March 7, 2021
---Advertisement---

கார்களில் முன் இருக்கைக்கு அவசியமானது ஏர்பேக், ஏனென்றால் கார்களில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து எதுவும் ஏற்பட்டு விட்டால் அந்த ஏர் பேக் விபத்து ஏற்பட்ட அடுத்த செகண்டில் விரிந்து நம்மை அதன் மீது மோதவைத்து விடும் காற்று ஏறிய பைதான் அது.

காற்று ஏறிய அந்த பை மீது நாம் உடனடியாக மோதும்போது நம் நெஞ்சுப்பகுதியோ, உடலின் மற்ற பாகங்களோ சேதமடைவதில்லை, மாறாக ஏர்பேக் இல்லையென்றால் விபத்து ஏற்பட்ட அடுத்த நொடியே வண்டியின் முன் பகுதியில் தலை அடிக்கவோ, நெஞ்சுப்பகுதி அடிக்கவோ வாய்ப்புகள் அதிகம்.

இதனால் ஏர்பேக் கட்டாயம் கார்களில் பொருத்த வேண்டும் என அரசு எத்தனை முறை சொன்னாலும் யாரும் கேட்பதில்லை.

இதனால் இதை தடுப்பதற்காக,மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் மீண்டும் புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் அனைத்து வகையான கார்களிலும் டிரைவர் இருக்கை, பயணி இருக்கை ஆகிய இரண்டுக்கும் ஏர்பேக் பாதுகாப்பு வசதி செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட கார்களுக்கும் இந்த வசதியை செய்வதற்கான அவகாசம், ஆகஸ்ட் 31 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறிய ரக கார்களின் விலைகள் ₹5 ஆயிரம் முதல் ₹8 ஆயிரம் வரை உயரக்கூடும் என தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க