---Advertisement---

ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு… தலா 5 லட்சம் நிவாரண அறிவித்த முதல்வர்…!

By Sri
Published on: September 1, 2024
---Advertisement---

ஆந்திராவில் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது சுமார் 65 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி  உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியது.

விஜயவாடா, மொகல்ராஜபுரம் மலையில் தற்போது வரை இடைவிடாமல் பெய்து வந்த மலையின் காரணமாக பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் வீடுகளின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் உடல் நசுங்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். தொடர் மழையின் காரணமாக உப்பில்லாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

அப்போது ஆசிரியர் ராகவேந்திரா மாண்விக், சவுரிஸ் என்ற மாணவர்களை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றிருக்கின்றார். அப்போது பாலத்தில் அதிக மழை வெள்ளம் சென்றதால் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மழையில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring release clash and scheduling themes for Dharman and Indian 3.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!

Editorial visual featuring futuristic sci-fi themes for Vettuvam.

பொங்கல் 2027 ரேஸில் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’: துல்கர் சல்மானின் சிறப்பு தோற்றம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Editorial visual featuring action shooting themes for Dhanush's D56.

சென்னையில் அனல் அரசு மாஸ்டர் சண்டைக் காட்சியுடன் தொடங்கிய தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு: சம்மர் 2027 ரிலீஸ்!

Editorial visual featuring romantic cinematic themes for Inji Vellam.

பொங்கல் 2027 ரேஸில் மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’: படப்பிடிப்பு நிறைவு மற்றும் ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring horror streaming themes for Dahaan.

அஹா ஓடிடியில் முதல் ஒடியா ஹாரர் படம் ‘தஹான்’: டிஜிட்டல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!