---Advertisement---

குரங்கும்மை பாதிப்பு… வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை…!

By Sri
Published on: August 21, 2024
---Advertisement---

குரங்கும்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் தொற்றுநோய் ஆப்ரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்திருக்கின்றது.

தமிழகத்திலும் விமான நிலையங்களில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கின்றது. இதை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது.

விமான நிலையத்தில் இரண்டு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை விமான நிலையத்திலிருந்து ஜார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அது மட்டும் இல்லாமல் தற்போது சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுகிறார்கள். சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இல்லாமல் பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Deepika Padukone Dances into Our Hearts: Behind the Scenes of 'Ghoomar'

விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு முதற்கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் அறிகுறிகளோ அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைப்பு செல்வதற்கு வசதியாக விமான நிலையத்தின் வளாகத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.