தமிழ் திரையுலகில் ஹாரர் மற்றும் த்ரில்லர் கதைகள் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து (Ajay Gnanamuthu), தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அதிரடியான மற்றும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இவர் இயக்கத்தில் உருவான ‘டெமோன்டி காலனி 3’ படம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இதன் நான்காம் பாகத்திற்கான கதையும் ஏற்கனவே தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஹாரர் ஜானரைத் தாண்டி இந்த ‘டெமோன்டி காலனி’ ஃபிரான்சைஸை (franchise) மொத்தம் 10 பாகங்கள் வரை தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முழுமையான கதைகள் தன்வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ‘டெமோன்டி காலனி 3’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா (Nayanthara) நடிப்பில் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன்-பேண்டஸி (Action-Fantasy) கதையை அவர் இயக்கவுள்ளார். இப்படத்தை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ (Passion Studios) நிறுவனம் தயாரிக்கவுள்ளதுடன், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து co-produce செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஹாரர் கலந்த த்ரில்லர் படங்களில் கலக்கி வரும் அஜய் ஞானமுத்து, நயன்தாராவுடன் இணைந்து ஒரு புதிய ஃபேண்டஸி உலகத்தை உருவாக்கவிருப்பது Kollywood வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













