---Advertisement---

குதிரையை கழுதையாக பார்க்கும் சமூகம்…வருத்தப்பட்ட அபிராமி… அப்படி என்ன தான் நடந்துச்சி?…

Published on: April 11, 2024
abhirami
---Advertisement---

“விருமாண்டி” படத்தின் மூலம் தமிழில் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை அபிராமி.  கமல்ஹாசனும் இவரும் இணைந்து நடித்த ‘அந்த’ காட்சிகள் இருவரும் நிஜமான கணவன், மனைவியா? என்று கேட்கக்கூடிய அளவிலேயே அமைந்தது.  “விருமாண்டி” படத்திற்குப் பிறகு தனக்கு வாய்ப்புகள் அதிகமாக வரும் என நினைத்திருந்த அபிராமியின் எண்ணம் ஈடேறவில்லை.

abirami2
abirami2

பிரபு தேவா, பிரபுவுடன் “சார்லி – சாப்ளின்” படத்திலும், பிரபுவுக்கு ஜோடியாக “மிடில் கிளாஸ் மாதவன்” படத்திலும் நடித்திருந்தார். சரத்குமாருடன் “தோஸ்த்”,  “சமுத்திரம்” படங்களிலும்,  மம்மூட்டியுடன் “கார்மேகம்” படத்திலும் கதாநாயகியாக இனைந்தார்.  ‘அக்சன்- கிங்’ அர்ஜூனுடன் “வானவில்” படம்.

இப்படி  பெரிய நடிகர்களுடன் நடித்த அபிராமி இது போன்ற வாய்ப்புகள் இனி அதிகமாக வந்தடையும் என எதிர்பார்த்திருப்பார். அதன் பிறகு வாய்ப்புகள் மெதுவாக குறைய துவங்கியது. கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருந்தாலும் குடும்பப்பாங்கான படங்களிலேயே அதிகமாக  நடித்தார்.

இப்படிப்பட்ட நேரத்தில் தான் கமல்ஹாசனுடைய படங்களில் பின்னணி குரல் கொடுத்து ‘டப்பிங்’ பேசி வந்தார். “விருமாண்டி” படத்தில் நடித்த போது அபிராமியின் வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்ததால்  தனது படங்களில் ‘டப்பிங்’ பேச அழைத்ததாக கமல்ஹாசனே ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.

virumandi abirami
virumandi abirami

அபிராமி சமீபத்தில் சமூகத்தின் மீதான  ஒரு ஆதங்கத்தை வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.  சினிமாவில்  தன்னுடைய உயரத்தை வைத்து பலரும் கேலி, கிண்டல் செய்தார்களாம்.  கதாநாயகி இப்படி உயரமாக இருந்தால், கதாநாயகனை எப்படி தேடுவது? என்கிற வரைக்கும் கிண்டல் பேச்சுக்கள்  சென்றதாம்.

அதோடு  மட்டும் நிற்காமல் இவருடைய தாடை சற்று நீளமாக இருப்பது கூட கேலியாக பேசப்பட்டதாம். சிறுவயதாக இருக்கும் பொழுது சிலர் அபிராமியின் கன்னத்தை கிள்ளுயதோடு மட்டுமல்லாமல், இவருடைய  தாடையை பிடித்து இழுத்து, இழுத்து கொஞ்சினார்களாம்.  இதனாலேயே இவருக்கு நீளமாகி போனதாம் தாடை.  ஒருவரிடம் உள்ள திறமையை பாராமல் ஒருவருடைய உருவத்தை வைத்து  கேலி செய்து, அதை பேசும் பொருளாக்கும்  ஒரு அவல நிலை இருப்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic highlighting that actor Madhavan was the initial choice for the blockbuster film Irumbuthirai.

விஷாாலுக்கு முன் இரும்புத்திரை நாயகனாக இருந்தது இவரா: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் வெளியிட்ட செம சீக்ரெட் தகவல்!

Conceptual graphic representing actor Legend Saravanan's upcoming project with director Thirukumaran.

லெஜண்ட் சரவணனின் அடுத்த புதிய படம்: இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் களமிறங்கும் மாஸ் கூட்டணி – முழு விவரம்!

Actor Soori speaking about how he handles online criticism and trolls.

கதைக்கும், விமர்சனங்களுக்கும் சூரி கொடுத்த மாஸ் பதிலடி: “எப்படியாவது குறை கண்டுபிடிக்க காத்திருக்காங்க!” – வைரலாகும் பேச்சு!

Conceptual graphic representing the exciting new film starring Varun Tej and produced by Karthik Subbaraj.

வருண் தேஜ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி: புதிய படத்தில் இணையும் மாஸ் காம்போ – இசையமைக்கும் சாய் அபியங்கர்!

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!