---Advertisement---

நடிகர் சூரியை ஏமாற்றி மோசடி செய்த தயாரிப்பாளர்கள்

Published on: October 9, 2020
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புராஜா என்பவர் 40லட்சம் இவருக்கு சம்பள பாக்கி தரவேண்டி இருந்ததாம்.

இதை கேட்டதற்கு தான் தரவேண்டிய 40 லட்சம் ரூபாயோடு சேர்த்து மேலும் சில லட்சங்கள் நீங்கள் தந்தால் இடம் வாங்கி தருவதாக கூறியுள்ளார் அதை நம்பிய சூரி மேலும் சில லட்சங்களை கொடுத்துள்ளார், இப்படியே 2.70 கோடி அளவில் வாங்கிய அந்த தயாரிப்பாளர் இடம் எதுவும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு கொடுத்தார். காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, மற்றொரு நபரான ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.