ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில்தான் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வருவார்கள்.
எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்குரிய நாளாக கருதப்பட்டு பெருமாள் கோவில்களில் கூட்டம் அலைமோதும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்யும் அளவில் கூட்டம் இருக்கும்.
தற்போது கொரோனா விதிமுறைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட விசயங்கள் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் நீண்ட காலம் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் இன்று புரட்டாசி சனி என்பதால் அதிகாலையிலேயே பெருமாள் கோவில்களில் குவிய தொடங்கினர்.
இதனால் தமிழகமெங்கும் உள்ள முக்கிய வைணவத்தலங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் மாஸ்க் அணிந்து புரட்டாசி பெருமாள் வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர்.













