---Advertisement---

திருப்பதி தேவஸ்தான சொத்துகளை ஏலம்விட தடைவிதித்த – ஆந்திர அரசு!

By Sri
Published on: May 26, 2020
Thirumala Thirupathi
---Advertisement---

திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை ஏலம்விட தடை – ஆந்திர அரசு உத்தரவு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ((டி.டி.டி) சொந்தமாக ஏகப்பட்ட அசையும், மற்றும் அசையா சொத்துகள் கோடிகணக்கில் உள்ளது. இதனையடுத்து, திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அசையா சொத்துகளான வீட்டுத் தளங்கள், விவசாய நிலங்கள் உட்பட 23 அசையா சொத்துக்களை தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஏலம் விட முடிவு செய்துயிருந்தது. 23 சொத்துக்களின் மொத்த வருத்த மதிப்பு (ஏல மதிப்பு) ரூ .1.54 கோடிக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை ஏலம்விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்மாநில அரசு திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.