---Advertisement---

நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

By Sri
Published on: May 11, 2020
---Advertisement---

திமுகவின் மகளிரணித் தலைவி கனிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் போலவே எதிர்க்கட்சியான திமுகவும்  ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நிர்வாகிகளிடம் பேசி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அறிவுறுத்தி வருகிறார்.

இப்போது அதே பாணியை அந்த கட்சியின் மகளிரணித் தலைவி கனிமொழியும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார். நேற்று மகளிரணி நிர்வாகிகளிடம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன எனக் கேட்டறிந்த கனிமொழி பெண்களுக்கு நாப்கின் கிடைப்பதில் சிக்கல் உள்ளதை அறிந்து மக்களுக்கு அளிக்கும் மளிகைப் பொருட்களோடு நாப்கினையும் வழங்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.