---Advertisement---

4 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிவு! கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்!

By Sri
Published on: April 30, 2020
---Advertisement---

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்ட 4 நாட்கள் ஊரடங்கு இன்றோடு முடியவுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை கடந்த 26 ஆம் தேதி அறிவித்தது.

இன்றோடு அந்த ஊரடங்கு முடியவுள்ள நிலையில் இன்று மட்டும் காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் இயங்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி முறை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நாளை முதல் வழக்கம் போல காலை 6 மணி முதல் 1 மணி வரைதான் இயங்கும் என அறிவித்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.