நடிகை இலியானா லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஏடாகூடாமான கேள்வி கேட்க அதற்கு நச்சென்று பதிலளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் , சில பிரபலங்கள் தனது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி டைம் பாஸ் செய்து வருகின்றனர்.
இதைப் போல நடிகை போது ஊரடங்கை முன்னிட்டு வீட்டில் முடங்கியுள்ளதால் சமூகவலைதளத்தின் மூலம் தனது ரசிகர்களோடு உரையாடினார்.அப்போது ஒரு ரசிகர் அவரிடம் ’மாதவிடாய் காலத்தில் காதலியை எப்படி சமாளிப்பது?’ என ஒரு கேள்வியைக் கேட்டார். அந்த ரசிகருக்கு கோபப்படாமல் பதிலளித்த இலியானா ‘”அந்த நாட்களில் உங்கள் காதலியை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.. அதிகமாக எரிச்சல் அடைவார்கள். நாம் அப்போது அவர்களை பொறுப்பாக பொறுமையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஏற்படும் வாக்குவாதத்தால் அவர்கள் கோபத்தின் உச்சத்திற்கே செல்வார்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது சாக்லெட்டை வீசி விட்டு ஓடி விடுங்கள்’ எனக் கூறினார்.







