கொரோனா சோதனை முடிவுகளை விரைவில் அறிந்துகொள்ளும் வகையில் சோதனை கிட்களை கேரளாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று தயாரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக அறிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மொத்தமாக 1.7 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. அதை மாநில அரசுக்கு பகிர்ந்தளித்தது.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் சோதனையை 10 நிமிடத்திலும் முடிவுகளை 2 மணிநேரத்திலும் கண்டறியும் விதமாக சோதனைக் கிட்களை சித்ரா திர்னூர் மருத்துவக் கல்லூரி தயாரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேரளாவின் அந்த மருத்துவக் கல்லூரிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.







