---Advertisement---

நம்ம புள்ளக்குட்டிகளுக்காக வெளிய போகாதீஙக் – வடிவேலு அழுது வீடியோ !

By Sri
Published on: March 27, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நடிகர் வடிவேலு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் தற்போது அவரை உலகில் 5.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழப்பு 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 700 ஐ நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. மேலும் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி  21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார். ஆனாலும் மக்கள் ஊரடங்கை சரியாகக் கடைபிடிக்காமல் அதிகளவில் வெளியே செல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு நடிகர் வடிவேலு  ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘மன வேதனையுடன் துக்கத்துடன் சொல்லுகிறேன்.. தயவு செய்து அரசு சொல்லுகிற படி வீட்டுக்குள்ளேயே இருங்க. நமக்காக தான் சொல்லுறாங்க,.. அவங்க சொல்லமாறி கேட்டு நடங்க, கொஞ்ச நாளுக்கு, உயிரை பணயம் வைச்சிருக்கற மருத்துவர் சொல்லதறபடி, நம்மள பாதுகாக்க காவல்துறை அதிகாரிகள் சொல்லறத கேட்டு நடங்க.. யாருக்காக இல்லையோ .. கையெடுத்து கும்பிட்டுக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்..நம்ம புள்ள குட்டிக்காக , சந்ததிக்காக, வம்சாவளிக்காக.. யாரு அசால்ட்டா இருக்காதீங்க.. ரொம்ப கொடூரமா இருக்கு’ என கண்ணீர்விட்டு தேம்பி அழுதபடி பேசியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க