---Advertisement---

ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

By Sri
Published on: March 26, 2020
---Advertisement---

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை வழங்கும் பொருட்டு அமேசான் ப்ரைம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனால் மக்கள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கியுள்ளதால் அதிகளவில் பொழுதுபோக்கிற்காக இணையத்தையே நம்பியுள்ளனர். ஒரே நேரத்தில் பலரும் இணையத்தை பயன்படுத்தும் பொருட்டு ஹேங்க் ஆகாமல் இருக்க, அமேசான் ப்ரைம் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 வரை எச்டி தரத்திலான வீடியோக்களைப் பார்க்க முடியாது என அறிவித்துள்ளது.

இதுகுறித்து தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘தவிர்க்க முடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க விரும்புகிறோம். அதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி குவாலிட்டியில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  திருச்செந்தூர் கோவிலுக்கு 10 நாட்கள் செல்ல வேண்டாம்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actor Vadivelu at his new Madurai residence.

மதுரையில் வடிவேலுவின் புதிய மாளிகை: தேனிசை தென்றல் தேவா குறித்த நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த வைகைப்புயல்!

Editorial visual featuring the song release from Jolliya Iruntha Oruthan.

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு: காதல் கசக்குது லிரிக் வீடியோ ட்ரெண்டிங்!

Editorial visual featuring the pre-release business of Aakasam Lo Oka Tara.

துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒகா தாரா’ பிரம்மாண்ட சாதனை: தியேட்டர் ரிலீசுக்கு முன்பே முழு முதலீட்டையும் மீட்ட படக்குழு!

Editorial visual featuring Arya's upcoming film line-up.

ஆர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: அடுத்தடுத்து வெளியாகும் 4 பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!

Editorial visual featuring reports on Anirudh Ravichander and Kavya Maran.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், மூன்று இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு!

Editorial visual featuring the music updates for Scene.

சூர்யாவின் ‘சீன்’ படத்திலிருந்து வெளியாகும் ஏரோப்ளேன் பாடல்: தீபாவளி ரிலீசுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்!