---Advertisement---

மலர்ச்செண்டு வேண்டாம் சானிடைசர் கொடுத்து அசத்திய நடிகர்

By Sri
Published on: March 26, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இப்பொழுது இந்தியாவிலும் நுழைந்து தன் மரண வேட்டையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா குறித்த சுகாதார பணிகளை மிகவும் சாதுரியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் இச்செயல் பல்வேறு தரப்பினர்களிலிருந்தும் பாராட்டப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திரைபிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நேற்றைய தினம், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்தார். அமைச்சரை சந்திக்க செல்லும்போது மலர்ச்செண்டு எதுவும் எடுத்துச் செல்லாமல் 5 லிட்டர் சானிடைசர்ரை அன்பளிப்பாக கொடுத்தார். மக்களின் சார்பாக வழங்கினார் என்றும் கூடுதலாக மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்களை பயன்படுத்தலாம் என்றும் விஜயபாஸ்கர் அவர்களுக்கு தன் தரப்பு யோசனையை கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

எப்பொழுதும் வித்தியாசத்திற்கு பெயர்போன நடிகர் பார்த்திபன் தனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி தற்போது சுழலுக்குகேற்ப சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரருக்கு சானிடைசர் வழங்கியது பெரும் வைரல் ஆகியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!