---Advertisement---

இப்போது தேவை அரசின் உத்தரவைப் பின்பற்றுவதுதான் – மோடிக்கு ஆதரவாக களமிறங்கிய கோலி !

By Sri
Published on: March 21, 2020
---Advertisement---

மோடி சொல்வது போல நாளை ஊரங்கு உத்தரவை மக்கள் செயல்படுத்த வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை செயல்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மோடியின் பேச்சுக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி தனது சமூகவலைதள பக்கத்தில் ‘இந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுவது கட்டுப்பாடும் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுவதும்தான். அதனால் வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்யமாக இருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க