---Advertisement---

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் சோதனை முடிவுகள் வெளியானது – ரிசல்ட் என்ன தெரியுமா ?

By Sri
Published on: March 19, 2020
---Advertisement---

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 8000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது.உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பில் சில பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

6 நாட்களுக்குப் பின்னர் அந்த சோதனை முடிவுகள் வெளியாகி அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இதை டிவிட்டரில் அறிவித்துள்ள ரிச்சர்ட்ஸன் ‘முதலில் இதை விளையாட்டாக நினைத்துக் கொண்டேன். பின்னர்தான் பிரச்சனையின் தீவிரம் புரிந்தது. பாசிட்டிவ் என முடிவு வராது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதே போல வந்துள்ளது. எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.