பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றிருக்கின்றார் மானு பாகெர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான மானு பாகெர் 221.7 புள்ளிகள் இடம் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
மானு பாகெர் வெண்கல பதக்கம் பெற்று அசத்தியிருக்கின்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்திருக்கின்றார். கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருந்தார்கள். ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மானு பாகெர் பதக்கம் வென்றது மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கின்றது.







