இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’ (Inji Vellam). ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைப்பில், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற 2027 ஜனவரி 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் மற்றும் வெளியீட்டுக்கு முந்தைய பிசினஸ் குறித்த சுவாரசியத் தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பரவி வருகின்றன.
தகவல்களின்படி, ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் இரட்டைக் குழந்தைகளை (Twins) மையமாகக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் கதாபாத்திரங்கள் பிளஸ் டூ (Plus Two) படிக்கும் காலத்திலேயே காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாகவும், அவர்களுக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளைச் சுற்றியே கதை நகர்வதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
மணிரத்னத்தின் திரைப் பயணத்திலேயே மிகக் குறைவான சினிமா மிகைப்படுத்தல்களுடன், மிகவும் எதார்த்தமான வாழ்வியல் படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, மணிரத்னத்தின் சகோதரர் சீனிவாசன் (Sreenivasan) வாழ்க்கையில் நடந்த சில நிஜச் சம்பவங்களும் இப்படத்தின் கதைக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாகத் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மறுபுறம், இப்படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் சுமார் ₹20 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகவும், ஆடியோ உரிமை ₹10 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சாட்டிலைட் உரிமை மட்டுமே பேச்சுவார்த்தையில் உள்ள நிலையில், விஜய் சேதுபதியின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் படங்களில் ஒன்றாக ‘இஞ்சி வெல்லம்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.













