சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கத்தில், ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ (RKFI) தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘தர்மன்’ (Dharman). இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரபல ஊடகவியலாளர் சித்ரா லட்சுமணன் நடத்திய உரையாடலின் போது, படத்தின் ரிலீஸ் திட்டங்கள் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெளிவுபடுத்தியுள்ளார். இத்திரைப்படம் ஆரம்பத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் இன்னும் நிறைய மீதமுள்ளதால், பொங்கல் பண்டிகைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிடவே இல்லை என்று இயக்குநர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.













