தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ், தனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பை நேரடியாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix Original) நிறுவனத்திற்காக இயக்கவுள்ளார். பாரம்பரிய தமிழ் கலை வடிவமான ‘புலி ஆட்டம்’ (Puli Aattam) கலையைப் பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது.
இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரபுதேவா மற்றும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் உபேந்திரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் 30 வயது இளைஞர்களாகவும் மற்றும் 60 வயதைக் கடந்த தற்போதைய காலகட்ட நபர்களாகவும் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் (Dual Age Timelines) தோன்றி நடிக்கவுள்ளனர். மேலும், பிரபுதேவாவின் மகனாக நடிகர் அதர்வா நடிக்கவுள்ள நிலையில், உபேந்திரா இப்படத்தில் சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய படங்களைப் போலவே விஷுவல் ரீதியாக ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையனுபவத்தைத் தரும் வகையில் இப்படம் மிகப்பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது. கார்த்திக் சுப்பராஜின் வித்தியாசமான திரைக்கதை உத்தியுடன், கிராமியக் கலையான புலி ஆட்டத்தின் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படம் உலகளவில் ஓடிடி பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













