---Advertisement---

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

By Sri
Published on: September 17, 2026
Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.
---Advertisement---

தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கிவரும் சீமான் (Seeman) சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் (STR) குறித்துப் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தான் இயக்க திட்டமிட்டிருந்த ‘பகலவன்’ (Pakalavan) திரைப்படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது குறித்தும், அப்போது சிம்பு காட்டிய தைரியம் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “நான் நடிகர் சிம்புவை வைத்து ‘பகலவன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், அப்படத்தின் கதை மற்றும் பின்னணியைக் கண்டு பல நடிகர்கள் அதில் நடிக்கப் பயந்தார்கள். எங்கு தனக்குச் சிக்கல் வந்துவிடுமோ என்று அனைவரும் பின்வாங்கினர். ஆனால், நடிகர் சிலம்பரசன் மட்டும் எந்தவித பயமும் இல்லாமல் மிகத் துணிச்சலாக அந்தப் படத்தில் நடிக்க முன்வந்தார். அதுமட்டுமின்றி, அப்படத்தின் தயாரிப்பாளரும் கூட தொடக்கத்தில் தயங்கினார்; இறுதியில் பல்வேறு சூழல்களால் அந்தத் ப்ராஜ்க்ட் கைவிடப்பட்டது” என்றார்.

மேலும் சிம்புவைப் பற்றிப் புகழாரம் சூட்டிய சீமான், “அவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட அன்பும் அக்கறையும் உண்டு. சிம்பு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் கலைஞர் (All-rounder artist). எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கித் திறம்படச் செய்யும் ஆற்றல் அவருக்கு உண்டு” என்றும் குறிப்பிட்டார். தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் கைவிடப்பட்ட இந்தப் படம் குறித்த சீமானின் இந்தப் பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!

Stylish first-look poster of Ajith Kumar from his upcoming action film Dare Devil.

அஜித்தின் ‘டெர்டெவில்’ ஃபர்ஸ்ட் லுக்: நவம்பர் 2-ல் படப்பிடிப்பு தொடக்கம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!