தமிழ் சினிமாவுல இப்போ இருக்குற மோஸ்ட் வான்டட் ஆக்டர்ஸ் லிஸ்ட்ல மணிகண்டன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிச்சுருக்காரு. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தொடர்ந்து இந்த வருஷம் ஆரம்பத்துல வெளியான ‘குடும்பஸ்தன்’ படம் மணிகண்டனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக்குடுத்துச்சு. அந்தப் படத்தோட வெற்றிக்குப் பிறகு மணிகண்டன் நடிச்சுட்டு இருக்குற அடுத்த படம் மேல ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு.
இப்போ அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுற விதமா ஒரு அதிரடி அப்டேட் கிடைச்சிருக்கு. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்புல, அவரோட உதவி இயக்குனர் ஒருத்தர் இயக்கத்துல மணிகண்டன் இப்போ நடிச்சு முடிச்சுருக்காரு. இந்தப் படத்துக்கு தற்காலிகமா மக்கள் காவலன் அப்படின்னு தலைப்பு வெச்சுருக்காங்க. சமீபத்துல இந்தப் படத்தோட அவுட்புட்டை பார்த்த பா.இரஞ்சித், மணிகண்டனை ரொம்பவே பாராட்டியிருக்காராம்.
மணிகண்டன் வழக்கமா எதார்த்தமான கதைகள்ல தான் நடிப்பாரன்னு ஒரு பிம்பம் இருக்கு. ஆனா, இந்தப் படம் அதை உடைச்சு அவருக்கு ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை கொடுக்கும்னு சொல்லப்படுது. அவுட்புட்டை பார்த்த பா.இரஞ்சித், இது மணிகண்டன் கரியர்ல ஒரு தரமான மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னரா இருக்கும்னு நம்பிக்கையா சொல்லியிருக்காரு. மணிகண்டனோட எதார்த்தமான நடிப்பும், நீலம் புரொடக்ஷன்ஸ் ஸ்டைல் மேக்கிங்கும் சேரும்போது அது கண்டிப்பா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமா இருக்கும்.

இந்தப் படத்தோட ரிலீஸ் வேலைகள் இப்போ வேகமா நடந்துட்டு இருக்கு. வர்ற ஜூன் அல்லது ஜூலை மாசத்துல படத்தை ரிலீஸ் பண்ண படக்குழு பிளான் பண்ணிருக்காங்க. தற்போது வந்த இந்தத் தகவல் மணிகண்டன் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டா அமைஞ்சிருக்கு.
நேச்சுரலான ஆக்டிங்ல கலக்குற மணிகண்டன், இப்போ பா.இரஞ்சித் டீம் கூட சேர்ந்திருக்கிறதுனால படத்துல சமூகக் கருத்துகளும், அதே சமயம் ரசிகர்களைக் கவரும் ஆக்ஷன் காட்சிகளும் அதிகமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு அப்புறம் ஒரு சின்ன கேப் விட்ட மணிகண்டன், இப்போ ஒரு பெரிய ஆக்ஷன் பேக்கேஜோட வர்றது கோலிவுட்ல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. ஜூன் மாதம் ராம் சரணின் ‘பெத்தி’ போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மணிகண்டனின் இந்த ‘மக்கள் காவலன்’ படமும் அந்தப் போட்டியில் இணைகிறது.













