---Advertisement---

KARA : “தனுஷ் கேட்ட அந்த ஒரு கேள்வி” – கர படத்தில் மிரட்டும் பிளாக் ஷேட் கேரக்டர்; மாமிதா பைஜூவை செலக்ட் பண்ணது இதனால தான்!

By Sri
Published on: April 15, 2026
Actor Dhanush in an intense grey-shaded look for the movie Kara directed by Vignesh Raja.
---Advertisement---

தமிழ் சினிமாவுல இப்போ இருக்குற டாப் பெர்ஃபார்மர்கள்ல தனுஷுக்கு (Dhanush) எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒரு நெகட்டிவ் ஷேடு கலந்த கேரக்டர்னா தனுஷ் அதுல புகுந்து விளையாடுவாரு. அந்த வரிசையில, ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கத்துல உருவாகியிருக்கு ‘கர’ (KARA) படம் இப்போ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கு. இந்தப் படத்துல தனுஷோட கேரக்டர் பத்தி விக்னேஷ் ராஜா பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்களை மிரள வெச்சிருக்கு. பொதுவாக ஹீரோக்கள் என்றாலே சில பாசிட்டிவ் அம்சங்கள் இருக்கும், ஆனால் இதில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிளாக் ஷேட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துல தனுஷோட ‘கரசாமி’ கேரக்டரை கிட்டத்தட்ட ஒரு ‘டார்க்’ (Black) ஷேடுக்கு இயக்குனர் கொண்டு போயிருக்காராம். இதைப் பார்த்த தனுஷ், “இவ்வளவு டார்க்கா இருந்தா ஆடியன்ஸ் இதோட கனெக்ட் ஆவாங்களா? கேரக்டர் மேல இருக்குற அந்த ஒரு சிம்பதி போயிடாதா? இந்த கதாபாத்திரம் திருத்தவே முடியாத ஒன்றாக மாறிவிடுமே”ன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு விக்னேஷ் ராஜா கிட்ட கேட்டிருக்காரு. ஆனா கதையில, அந்த கேரக்டரோட தாக்கம் அதிகமா இருக்கணும்னா இதுதான் சரினு இயக்குனர் சொன்ன உடனே, தனுஷ் அதுக்கு முழு சம்மதம் கொடுத்து நடிச்சு கொடுத்திருக்காரு. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதற்கு இதுவே பெரிய சான்று.

“கதையே ஹீரோவாக இருக்கட்டும், எனக்குனு தனியா ஹீரோயிசம் தேவையில்லை” – இதுதான் தனுஷ் இயக்குனருக்கு கொடுத்த ஒரே நோட்.

Actor Dhanush in an intense grey-shaded look for the movie Kara directed by Vignesh Raja.
“பார்டர்-லைன் பிளாக்”: கர படத்தில் தனுஷின் மிரட்டலான கதாபாத்திரத்தை விவரிக்கும் விக்னேஷ் ராஜா!

இந்தப் படத்துல மாமிதா பைஜூ (Mamitha Baiju) தான் ஹீரோயினா நடிக்கிறாங்க. ‘செல்லி’ங்கிற அந்த கேரக்டருக்காக இயக்குனர் கிட்டத்தட்ட 20-லிருந்து 25 பெண்களை ஆடிஷன் பண்ணிருக்காரு. அதுல புதுமுகங்கள், ஏற்கனவே அறிமுகமான நடிகைகள்னு பல பேர் இருந்திருக்காங்க. ஆனா மாமிதா கொடுத்த அந்த ஒரு ஆடிஷன் பெர்ஃபார்மன்ஸ் வேற லெவல்ல இருந்ததால, யாரோட சிபாரிசும் இல்லாம பியூரா டேலண்ட் (talent) மூலமா இந்த வாய்ப்பு அவருக்கு கிடைச்சிருக்கு. மாமிதாவின் நடிப்புத் திறமை இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருக்கும் என விக்னேஷ் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

2026 ஏப்ரல் 30-ல ரிலீஸ் ஆகப்போற இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைச்சிருக்காரு. ஏற்கனவே ‘இட்லி கடை’, ‘யூத்’னு பேக்-டு-பேக் ஹிட் கொடுத்த ஜிவி, தனுஷோட இந்தக் ‘கர’ படத்துக்கும் ஒரு பவர்ஃபுல்லான ஸ்கோர் குடுத்திருப்பார்னு ரசிகர்கள் நம்புறாங்க. தனுஷோட 54-வது படமான இது, ஒரு எமோஷனல் சஸ்பென்ஸ் த்ரில்லரா அமையும்னு விக்னேஷ் ராஜா உறுதி குடுத்திருக்காரு. ஒரு கமர்ஷியல் ஹீரோவா இல்லாம, ஒரு கதையின் நாயகனா தனுஷ் இதுல எப்படி கலக்கப்போறாருன்னு பாக்குறதுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் வெயிட்டிங்! குறிப்பாக ராமநாதபுரம் மக்களின் வாழ்வியலை இந்தப் படம் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!

Director RJ Balaji sharing details about Aamir Khan message to actor Suriya and Silambarasan TR phone call praising Karuppu movie success.

சூர்யாவுக்கு வந்த மெசேஜ்… தியேட்டரை அதிரவிட்ட பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய டாப் ஹீரோ!

Sun Pictures celebrating 10 million plus Spotify streams milestone poster for the viral hit track Raga Of Revenge.

ஸ்பாட்டிஃபையில் 10 மில்லியன் ஸ்ட்ரீம்கள் கடந்து சாதனை படைத்த சன் பிக்சர்ஸின் மாஸ் ட்ராக்

Actor Akash Murali debut movie launch pooja stills with director H Vinoth and producer Raahul from Romeo Pictures.

கோலிவுட்டில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் வாரிசு… எச் வினோத் முன்னிலையில் பிரம்மாண்ட தொடக்கம்!

Actor Naga Chaitanya wins personality rights case in Delhi High Court against unauthorized AI use and merchandising.

பெயர், குரல், புகைப்படம் பயன்படுத்த அதிரடி தடை; நீதிமன்றத்தை நாடிய பிரபல முன்னணி நடிகர்!