---Advertisement---

கடவுளை நம்பியிருக்கலாம்… பனிச் சுமையால் உயிரிழந்த பெண்… நிர்மலா சீதாராமன் சர்ச்சை கருத்து…!

By Sri
Published on: September 23, 2024
---Advertisement---

பனிச் சுமை காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்னெஸ்ட் அண்ட் யங்கு என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான இளம் பெண் பனிச்சுமை காரணமாக அதிக அழுத்தம் ஏற்பட்ட கடந்து ஜூலை 20-ம் தேதி விடுதியில் உயிரிழிந்தார். இவரின் உயிரிழப்பு கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கார்ப்பரேட் கலாச்சாரத்தால் வேலை நேரம் மற்றும் பணி சுமையால் அதிக இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் அன்னா செபாஸ்டியன் மரணம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கின்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது ‘நமது பிள்ளைகள் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களிலும் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கி படித்து வருகின்றன.

சிஏ படித்த பெண் ஒருவர் நிறுவனம் ஒன்றில் பனி சுமையை சமாளிக்க முடியாமல் இறந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது. நீ என்ன வேலை செய்தாலும் மனதில் ஏற்படும் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சக்தி உன் உள் வரவேண்டும். அது தெய்வீக மூலமாக தான் நடக்கும் இறைவனை நம்பு இறைவனை நாடு எனப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Kingston: G.V. Prakash's Ambitious Fantasy Horror Film – A Complete Review

ஆன்மீக சக்தி வளர்ந்தால் தான் அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு இன்னர் ஸ்ட்ரென்த் வளரும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உயிரைப் பறிக்கும் விஷத்தன்மை உடைய பணியிட சூழல்களை ஒழுங்குபடுத்துவதை விட்டுவிட்டு ஊழியர்கள் எவ்வளவு பணி சுமையையும் கடவுள் நம்பிக்கை இருந்தால் சரி செய்து விடலாம் என்று நிதி அமைச்சர் பேசியிருப்பதை நியாயமற்றது’ என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?