தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்று ஆளுநர் ஆர் என்ற ரவி மீண்டும் குற்றச்சாட்டை வைத்திருக்கின்றார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித்துணிக என்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்து விட்டதாக மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் தமிழகத்தில் “மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். கஞ்சா மட்டும் இன்றி ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசு பள்ளிகளில் அதிகரித்து இருக்கின்றது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்துவிட்டது. கற்கும் திறன் இல்லை என்றாலும் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படுகின்றது.
அரசு பள்ளிகளில் தரம் குறைந்து 70% மாணவர்களால் எண்களையும், 40 சதவீதம் மாணவர்களால் எழுத்துக்களையும் படிக்க முடியவில்லை. தொடர்ந்து அரசு பள்ளிகளின் தரம் குறைந்து தான் இருக்கின்றது” என்று அதில் பேசியிருக்கின்றார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஏற்கனவே ஆளுநர் ரவி தமிழகத்தில் பாடப் புத்தகங்களில் தரம் இல்லை என்று பேசி இருப்பது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது மாணவர்கள் குறித்தும் அவர்களின் கற்றல் திறன் குறித்தும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.













