---Advertisement---

இனிமே ஒரு நிமிஷம் தான்… பத்திரப்பதிவின்போதே இது உடனடியாக கிடைக்கும்… தமிழக அரச அதிரடி அறிவிப்பு…!

By Sri
Published on: September 4, 2024
---Advertisement---

பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின்போது உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது.

தமிழக அரசு சார்பாக பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பத்திரப்பதிவின்போதே உடனடி பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை தமிழக அரசு விரிவாக்கம் செய்திருக்கின்றது.

அதன்படி பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும்போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்த போது தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திர பதிவு செய்யும்போது பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றது.

உட்பிரிவு செய்யத் தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும்போது உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்படும். அரசின் வருவாய் துறை கிராமங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் என்ற இணையதளத்தை மேம்படுத்தி இருக்கின்றது.

தமிழகத்தில் இருக்கும் 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்ப்புறத்தில் உள்ளது. இவை தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல் கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிட முடியும். இந்த இணையதளம் பத்திரப்பதிவுத்துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும்போதே இனிய பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Parthiban talking about his past movie rejections and future commercial projects.

“நான் நாட்டாமை படத்தை ரிஜெக்ட் பண்ண காரணம் இதுதான்”: பரிதாபமாகத் தவறிய பிளாக்பஸ்டர் ஹிட் – மனம் திறந்த நடிகர் பார்த்திபன்!

Announcement graphic for the audio launch of Jailer 2.

‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு!: அக்டோபர் 2-ல் பிரம்மாண்ட விழா – ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Stylish look of actor Vikram from Chiyaan 63 movie.

விக்ரமின் ‘சியான் 63’ மாஸ் கதைக்களம்: செஃப் ஆக களமிறங்கும் சீயான் – அதிர வைக்கும் படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்!

Special poster of actor Pavish from the movie Attacker.

தனுஷ் மருமகன் பவிஷின் ‘அட்டாக்கர்’: பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது மிரட்டலான ஸ்பெஷல் போஸ்டர்!

Promotional poster of Rio Raj's Ram and Leela movie.

ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’: தணிக்கையில் ‘U/A’ சான்றிதழ் பெற்று ரிலீஸுக்குத் தயாரான கலகலப்பான காதல் படம்!

Promotional graphic for the viral Chinese animated movie Niu Lai.

இணையத்தில் கிண்டல் செய்த நெட்டிசன்கள் – சீனாவில் விசித்திரமாக சாதனை படைத்த அனிமேஷன் படம்!