---Advertisement---

மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என எதுவும் இல்ல… ஹேமா கமிட்டி குறித்து நடிகர் மம்முட்டி கருத்து…!

By Sri
Published on: September 1, 2024
---Advertisement---

மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என்று எதுவும் இல்லை என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து முதன்முறையாக மம்முட்டி பேசியிருக்கின்றார்.

கேரளா திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இது மிகப்பெரிய பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. இது மலையாள சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவலபாபு, சுதீஷ், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீது பல புகார்கள் வந்துள்ளது. நடிகர் மோகன்லால் அம்மா சங்கத்தை கலைத்து தனது பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திரையுலகத்தை சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார். தனது பேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது என அனைத்தும் திரைத் துறையிலும் உள்ளது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தின் முன் உள்ளது.

இது குறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்கு பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகாரம் மையம் என்று எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதில் அளிக்கட்டும் என்று தான் காத்திருந்தேன். ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும் தீர்வுகளையும் நான் முழு மனதோடு வரவேற்கின்றேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்ப்போடு கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vishnu Vishal practicing boxing with gloves for his upcoming sports drama directed by Arunraja Kamaraj.

“3 தயாரிப்பு நிறுவனங்கள் ரிஜெக்ட் செஞ்சாங்க..!” சொந்த தயாரிப்பில் களமிறங்கும் விஷ்ணு விஷால்.. சார்பட்டா பரம்பரை கொடுத்த சவாலால் அருண்ராஜா காமராஜ் படத்திற்காக எடுத்த விஸ்வரூப முடிவு..!

Director SS Rajamouli interacting about his movie framing setups and IMAX technology at Annecy Animation Festival.

“செப்டம்பருக்குள் ஷூட்டிங் முடிகிறது..!” ஐமேக்ஸ் திரையரங்குகள் குறித்துப் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி நெகிழ்ச்சிப் பேச்சு.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் விசுவல் ட்ரீட் அப்டேட்ஸ்..!

Super Star Mohanlal and Meera Jasmine featured in Tharun Moorthy upcoming Malayalam movie Athimanoharam release poster.

தியேட்டர்களில் மோகன்லால் மேஜிக்..! லாலெட்டனின் ‘அதிமனோகரம்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. கிறிஸ்துமஸ் ரேஸில் குதிக்கும் பிரம்மாண்ட மலையாளத் திரைப்படம்..!

South Indian playback singer Sunitha Upadrashta talking about true feminism and women empowerment in a recent interaction.

“பெண்ணியம் என்றால் என்ன தெரியுமா..? பாடகி சுனிதா வெளியிட்ட அதிரடி கருத்து.. தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பெண்ணியம் குறித்து உடைத்துப் பேசிய தென்னிந்திய பிரபல பாடகி..!

Actor Prithviraj Sukumaran sharing thoughts about his demanding film shooting experiences and dedication of directors.

“97 டேக்குகள் வாங்கினோம்..!”படப்பிடிப்பு தளத்தில் நடந்த கடுமையான சம்பவத்தை வெளிப்படுத்திய பிருத்விராஜ் சுகுமாரன்.. சமரசம் செய்யாமல் பிரம்மாண்டத்தை செதுக்கிய படக்குழுவின் மெகா அர்ப்பணிப்பு..!

Rockstar Devi Sri Prasad musical journey announcement poster of Singeetam Srinivasa Rao's movie Sing Geetham.

“காதல் மற்றும் இசையில் நனையத் தயாராகுங்கள்!”.. சிங்கீதம் சீனிவாச ராவின் ‘சிங் கீதம்’ படக்குழுவின் மெகா சர்ப்ரைஸ்.. நாளை முதல் தொடங்கும் பிரம்மாண்ட மியூசிக்கல் ஜர்னி வெளியீடு.. ராக்ஸ்டார் DSP-யின் மிரட்டலான ஆல்பம் அப்டேட்!