---Advertisement---

நீங்க என்ன பண்ணாலும் சரி… எங்களுக்கு பழசு தான் வேணும்… விடாப்பிடியாக நிற்கும் தமிழகஅரசு ஊழியர்கள்…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த போதிலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று அரசு அலுவலர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 24ஆம் தேதி அமல்படுத்துவதற்கு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட சராசரி அடிப்படையில் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.

முழு ஓய்வூதிய பெறுவதற்காகன  தகுதியான பணிக்காலம் 25 ஆண்டுகள் ஆகும். 25 ஆண்டுகளுக்கும் குறைவாக அரசுப்பணியில் இருப்பவர்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும் ஓய்வூதிய தொகை விகிதசராசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும் மத்திய அரசு பங்களிப்பு 14 சதவீதமும் இருக்கின்றது.

ஆனால் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி 18 சதவீதமாக அது உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிவுறுத்தி இருக்கின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மாட்டுக்கறி சாப்பிடறவன் கீழ்ஜாதி... மாட்டு மூத்திரம் குடிப்பவன் மேல்ஜாதி... சீமான் சர்ச்சை பேச்சு...!

எங்களுக்கு பழைய ஓய்வூதிய தட்டம் தான் வேண்டும் என்று நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை வரவேற்கின்றோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காது.

கடந்து 2003 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் தமிழக அரசு இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் எந்த பிரச்சினையும் எழாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!