---Advertisement---

பெண்ணியம் காப்பாற்ற, புரட்சிகரமான திட்டங்களை தீட்டு… வானில் உன் கொடி பறக்கட்டும்… மகனுக்கு வாழ்த்து சொன்ன ஷோபா…!

By Sri
Published on: August 22, 2024
---Advertisement---

பனையூரில் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். இது தொடர்பான பாடலுடன் கட்சியின் கொடி வெளியானது. சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் இரண்டு போர் யானைகள் வாகை மலர் கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடி வடிமைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும் இந்த கொடி சம்பந்தமான பாடலை கவிஞர் விவேக் எழுத தமன் இசையமைத்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாக பார்க்கின்றேன்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்கு உழைப்பதற்கு தயாராகுவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அனைவரும் இணைந்து உழைப்போம் என்று பேசியிருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கின்றார். அதில் இதுபோல எப்போதும் உண்மையாக இரு.. நாட்டுக்கே ராஜா நாளும் எனக்கு பிள்ளை.. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்களை தீட்டு வானில் பறக்கும். உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)’ என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.