---Advertisement---

கடைசியாக ஒரு முறை… சகோதரருக்கு ராக்கி கட்டிவிட்டு உயிரை விட்ட தங்கை… சோக சம்பவம்…!

By Sri
Published on: August 19, 2024
---Advertisement---

தான் உயிரிழப்பதற்கு முன்பு தனது சகோதரருக்கு ராக்கி கட்டி விட்டு தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிப்ளமோ படித்து வருகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணிற்கு ஒரு நபர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கின்றார்.

அவரை காப்பாற்றிய குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தன. இந்நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உயிரிழந்தார். தான் உயிரிழக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு தனது இரண்டு தம்பிகளுக்கு அந்தப் பெண் ராக்கி கயிறு கட்டி விட்டார்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ராக்கி கட்டி விட்ட சில மணி நேரத்திலேயே அந்த பெண் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்த வரை தேடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க