---Advertisement---

2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

By Sri
Published on: August 8, 2024
---Advertisement---

2 நாள் கழித்து மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கின்றது. கடந்த மாதம் தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை ஒரு சவரனுக்கு 55 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. இது நடுத்தர மக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தங்கம் என்பது அவர்களுக்கு எட்டா கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றியது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் எதிரொலி காரணமாக சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 50,640 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இதையடுத்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 50,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6350 க்கும் விற்பனையாகி வருகின்றது. மேலும் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 86.50 காசுக்கும் விற்பனையாகி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.